Pages

Tuesday, May 15, 2012

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3

சென்ற வார பதிவுகளில் Morquee Tools பற்றி பார்த்தோம். இப்போது இந்த மார்க்யு டூலை தேர்வுசெய்து மேலும் பல வசதிகளை பெறுவது பற்றி பார்ப்போம்.  
இப்போது நீங்கள் உங்கள் போட்டோஷாப்பில் பார்த்தீர்களே யானல் உங்களுக்கு File,Edit,Image பாருக்கு கீழ் இருப்பதுதான் Options Bar. இதில் செலக் ஷன் டூல்கள் 4 இருக்கும். அந்த டூல்கள் தான் இவை:- alt



இதில் முதலில் இருப்பது New Selection. சென்ற பதிவில் இதை பார்த்தோம். சதுரமாகவோ - செவ்வகமாக வோ படம் இருந்தால் தேர்வு செய்துவிடுகின்றோம். ஆனால் அதுவோ செவ்வகம் நெடுக்கு வசத்திலும் – படுக்கை வசத்திலும் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால் என்ன செய்வீர்கள். அதற்குதான் இந்த இரண்டாவதாக உள்ளAdd to Selection Tool உதவுகிறது.

இப் போது இந்த படத்தைபாருங்கள்.alt



இந்த படத்தில் நமக்கு கோபுரமும் பிரகாரம் மட்டும் வேண்டும்.ஆனால் New Selection Tool-ல் தேர்வு செய்யும் போது மொத்தமாக தேர்வாகும். ஆனால் Add Selection Tool-ல் பயன்படுத்துவது பார்ப்போம். முதலில் New Selection மூலம் கோபுரம் மட்டும் தேர்வு செய்யுங்கள்.alt


அடுத்து Add Selection Tool மூலம் பிரகாரம் மட்டும் தேர்வு செய்யுங்கள். படத்தை பாருங்கள்alt



இப்போது சென்ற பாடத்தில் சொன்னவாறு காப்பி -பேஸ்ட் செய்யுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும்.

 alt
இப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில் ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர் நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது? அதற்கு இந்த Subtract Selection Tool உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும் தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணி மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள். இப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில் ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர் நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது? அதற்கு இந்த Subtract Selection Tool உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும் தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணி மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள்.alt



முன்பு கூறியபடி தேர்வுசெய்து கட்-காப்பி-பேஸ்ட் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு அந்த பெண்மணி நீங்கலாக படம் தேர்வாகும். படத்தை பாருங்கள்.alt

வரும் பாடங்களில் வெண்மைநிறத்தை பேட்ச் ஓர்க் மூலம் நிரப்புவதை பின்னர் பார்க்கலாம். கடைசியாக உள்ளது Intersect with Selection. படத்தில் உள்ள கிணறை மட்டும் தேர்வு செய்ய இந்த டூலால் முடியும். படத்தை பாருங்கள்.

 alt


இப்போது கிணறை தேர்வு செய்து கட்- காப்பி-பேஸ்ட் செய்தால் உங்களுக்கு இவ்வாறு படம் கிடைக்கும்.alt



இதுவரை நாம் Rectangle Marquee Tool பார்த்தோம். அதுபோல் Eliptical Marquee Tool லும் நாம் படங்களை தேர்வு செய்யலாம்

.alt



இதிலும் மேற்படி நாம் Selection Tool ஆல் தேர்வு செய்ததை பாருங்கள். alt



இதுபோல் புகைப்படங்களை நீங்கள் தேர்வு செய்து விதம்விதமாக கட் செய்து பார்க்கலாம். ஆனால் நீங்கள் புகைப்படங்களை மாறுதல் செய்யும் முன் மறக்காமல் டூப்ளிகேட் எடுத்துவைதது செய்யவும்.

போட்டோஷாப் பற்றி
மூம்மூர்த்திகள் உள்ளது போல் போட்டோவில் மொத்தம் மூன்று கலர்களே உள்ளன. அவை RGB எனப்படும் RED,GREEN,BLUE என்பனவே அவை. இவை ஒவ்வோன்றும் 256 shadow கொண்டு உள்ளது. அவைகள் மூன்றும் சேரும்போது நமக்கு 256x256x 256 என மொத்தம் 16777216 நிறங்கள் கிடைக்கும்.


கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment