Pages

Wednesday, September 18, 2013

ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் Offline Google Translate வசதியை பெற....

           Google Translate வசதி ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு நேரடியாக மாற்ற உதவும் ஒரு வசதியாகும். இந்த வசதியை இலவசமாக Google நமக்கு வழங்குகிறது. இந்த வசதியை தற்பொழுது ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் பயன்படுத்த முடியும்.

                     

              தற்பொழுது ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பயன்படுத்தும் விதமாக புதிய வெர்சன் ஆண்ட்ராய்ட் டிரான்ஸ்லேட் அப்ளிகேஷனை (New Version Android Offline Translate apps) வெளியிட்டுள்ளது Google. அதாவது நாம் ஆன்லைனில் இருக்கும்பொழுது உலக மொழிகளிலிருக்கும் வார்த்தைகளை ஒரு மொழியிலிலிருந்து மற்றொரு உலக மொழிக்கு மாற்றம் செய்யமுடியும். இது நமக்குத் தெரியும். தற்பொழுது இந்த  Android Translate Apps - ன் புதிய வெர்சனில் ஆன்லைனில் மட்டும் அல்லாமல் ஆப்லைனிலும் இருமொழிகளுக்கிடையே மொழிமாற்றம் செய்துகொள்ள முடியும். இந்த வசதியை இணைய இணைப்பு இல்லாமலே (without internet connection) பயன்படுத்த முடியும் என்பதுதான் இந்த புதிய ஆன்ட்ராய்ட் டிரான்ஸ்லேட் அப்ளிகேஷனின் சிறப்பு.

முக்கிய குறிப்புகள்:

  • இந்த வசதியை நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்துவதற்கு, மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய மொழிகளை Offline Languages​​ க்கு மாற்றி மொழிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.
  • Voice Speech translate மூலமும் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்ற இவ்வசதியைப் பயன்படுத்த முடியும்.
  • இவ்வசதியை நீங்கள் பயன்படுத்த உங்களுடைய ஆண்ட்ராய்போனில் Android 2.3 அல்லது அதற்குப் பிறகு வெளிவந்த புதிய ஆண்ட்ராய்ட் Version மென்பொருள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
                 இந்த New Version Android Offline Translate apps  தரவிறக்கம்  செய்ய இங்கு Click செய்யவும்.


கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment